புலிகள் கூட இவ்வாறான தாக்குதலை மேற்கொள்ளவில்லை – சந்திரிக்கா

விடுதலைப்புலிகள்கூட  குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்தளவு தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் தேசத்துக்கு ஏற்பட்ட பாரிய அழிவாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் இந்த தாக்குதல்களை மேற்கொண்ட அமைப்பு எவ்வாறு அமைப்பு ரீதியாக உருவாகியது, இந்த தாக்குதலை முன்கூட்டியே ஏன் தடுக்கமுடியவில்லை என்ற கேள்விகள் இருக்கின்றன. அதேபோல் இதற்கு யார் பொறுப்புகூறவேண்டும் என்ற கேள்வியும் இருக்கின்றது.  என்றாலும் என்ன செய்திருக்கவேண்டும். எதனை தவறவிட்டோம். யார் இதில் குற்றவாளி என்பது எனக்கு தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

என்றாலும் தற்போதுள்ள நிலையில் எதிர்காலத்தில் எமது நல்லிணக்க வேலைத்திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.