ஈஸ்டர் தாக்குதல்களின் விளைவுகள்

(நன்றி கருணாகரன் சிவராசா).

1. மீண்டும் ஒரு யுத்த காலத்தைப்போல நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது.

2. வடக்குக் கிழக்கிலிருந்து படையினர் வெளியேற வேண்டும் என்ற நிலை தலைகீழாகி விட்டது. பாதுகாப்புக்குப் படையினரில் தங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. பாடசாலைகள், பொது இடங்களின் சுற்றயலில் மறுபடியும் படைநிலைகள் அமைக்கப்படவுள்ளன.

3.. முஸ்லிம்கள் வரலாறு கண்டிராத நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

4. முஸ்லிம் சமூகத்தின் மீதான வெறுப்பை மறைத்து வைத்திருந்தவர்களை அடையாளம் காண வைத்துள்ளது.

5. வெளிச்சக்திகள் சுலபமாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை நாட்டை விட்டு அதிகளவானோர் வெளியேறும் நிலையும் உருவாகியுள்ளது.

6. இலங்கையின் பொருளாதாரம் (சுற்றுலாத்துறை) பாரிய வீழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

7. நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி விட்டது.

8. மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

9. அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய பேச்சே இப்போதைக்கிருக்காது.

10. அரசியல் தீர்வுபற்றிய கதையாடல்கள் முடிவுக்கு வந்துவிட்டன.