ஈராக்கில் இருந்து இலங்கை வந்த பயங்கரவாதம்.

(நன்றி வரதன் கிருஸ்ணா)

1999 ஆம் ஆண்டு அபூபக்கர் அல் பஹாடி என்ற நபரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐஸ் ஐஸ் இதற்கு பிரதி தலைவர்களாக ஈராக்கை சேர்ந்த அல் பாத்திமா அல் ஜாஸி இன்னொரு பிரதி தலைவர் சிரியாவை சேர்ந்த அபூ அலி அல் அன்சாரி, அடுத்தவர் லிபியாவில் அப்துல் பக்கீர் அல் நாஜீட், இராணுவ தளபதி அபூ சாலே ஒபாயிடி , இதைவிட மத்திய கிழக்கு சோமாலியா கிழக்கு ஆப்பிரிக்கா என பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என பரந்து விரிந்த அமைப்பு அது மத்திய கிழக்கில் பெரும்பாலான எண்ணை கிணறுகள் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது உலகத்திலேயே தனது உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒரே அமைப்பு இது மட்டுமே சாதாரண ஒரு உறுப்பினருக்கு இலங்கை ரூபாயில் சுமார் இரண்டு லட்சம்வரை ஊதியமாக கிடைக்கிறது.

அதன் தலைவர் 2016ஆம் ஆண்டு சிரியாவின் எல்லையில் அமெரிக்க வான் படையின் தாக்குதலில் பட்டு காயமுற்று ஊனமுற்றார் எனவும் பின்னர் இறந்துவிட்டார் என பலமுறை செய்திகள் வெளியான போதிலும் அந்த செய்தியை இன்னும் அந்த இயக்கம் உறுதி செய்யவில்லை, இத்தனைக்கும் அல் பஹாடி ஈராக் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற ஒருவர் அதைவிட பல உயர்கல்வி கற்ற ஒருவர், இவரது நோக்கம் ஒன்றே ஒன்றுதான் முஸ்லீம் அல்லாதவர்களை கொலை செய்து உலகம் முழுவதும் இஸ்லாமிய உலகாக பிரகடனம் செய்வது மட்டுமே ஆனால் இந்த இயக்கம் இன்று ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இருந்து பின்வாங்கி தனது பலத்தை இழந்து வந்தாலும் உலகத்தில் பெருந்தொகையான பணம் புரளும் ஒரு அமைப்பாகும் அத்தோடு இரக்கமே இல்லாத ஒரு கொடூர இயக்கமாகும் 99 இல் ஈராக்கில் உருவாகி அது இலங்கை வர இருபது வருடங்கள் ஆகி இருக்கின்றது, இலங்கை அரசு அதன் நடவடிக்கைகளை துடைத்து எரிந்தாலும் அதன் கொள்கையை ஏற்று நாட்டுக்குள் நடமாடும் மண்டை சுத்தம் செய்யப்பட்டவர்களை அடையாளம் காண்பது கஸ்டமாகவே இருக்கும்.