வாப்பா வாப்பா என்று அழுதகுழந்தை தாயைப்போல் கை கொடுத்த இராணுவ வீரர் .

#வாப்பா… #வாப்பா… உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்….
#பயப்படாதே! #அம்மா_வருவார்! – இராணுவ வீரரின் தாய் மனம் கொண்ட ஆறுதல் வார்தைகள் இராணுவத்தின் மீதான மரியாதையை மனதில் மலையளவு அதிகறிக்க வைக்கிறது.
பெற்றடுத்த பெற்றோர் வழிகெட்டு நாசமாய்போய், தானும் செத்து, அப்பாவி பொது மக்களையும் சாகடிக்க துணிந்து மனித தன்மையை இழந்து மிருகங்களாக மாறியுள்ள நிலையில், தாயுள்ளத்துடன் இந்தக் குழந்தையை காப்பாற்றிய இலங்கை இராணுவ அதிகாரிகளை பாராட்ட வார்த்தையில்லை….
நேற்று (26.04.2019) கல்முனையில் ISIS பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரு குழந்தையை இலங்கை இராணுவம் காப்பாற்றி, தமது மனித நேயத்தையும், அழகிய பண்பையும் வெளிப்படுத்தியமையை பாராட்ட வார்த்தையில்லை.
-ரஸ்மின் MISc