சீருடைக்கான காசோலையின் காலாவதி திகதி நீடிப்பு

2019ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கு வழங்கப்பட்ட காசோலையின் காலாவதி திகதி, எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டே, காலாவதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கச் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கு வழங்கப்பட்ட காசோலைக்கான காலம், இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.