பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 வீடுகள் கண்டுபிடிப்பு

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்டும் 4 வீடுகள் முற்றுகையிடப்படுள்ளன.

 

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிளில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் 4 வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 119 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.