சாய்ந்தமருதில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர்,பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த போது துப்பாக்கி பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

 

சம்மாந்துறையில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்மாந்துறை – செந்நெல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட ​சோதனை நடவடிக்கையின் போது தற்கொலை அங்கி உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பலத்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.