மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

கண்டன அறிக்கை
கடந்த 21.04.2019ம் திகதி எமது இலங்கை நாட்டின் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
 குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்களின் ஈஸ்டர் பண்டிகைத் தினத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபடும் போது மதஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் எமது உள்ளங்களில் மிக மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், சமாதானத்தையும், புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமென அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வலியுறுத்துகின்றது.
நாட்டுமக்கள் அனைவரும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் தொடர்ந்தேர்ச்சியாக கடைப்பிடிக்குமாறும், தேசவிரோத தீவிரவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்கவும் எமது தேசத்தை சமாதான தேசமாக கட்டியெழுப்பவும் அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வேண்டிக் கொள்கின்றது.
அஷ்ஷெய்க் மௌலவி அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ, பஹ்ஜீ)
தலைவர்,
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ்
நம்பிக்கைப் பொறுப்பு,
காத்தான்குடி.