கல்முனையில் இரத்ததானம் வழங்க இளைஞர்கள் முண்டியடிப்பு (காரைதீவு நிருபர் சகா)

மட்டக்களப்பு சியோன் தேவாலய குண்டுத்தாக்குதலில் காயப்பட்டவர்களுக்காக இரத்தம் வழங்க கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இளைஞர்கள் முண்டியடித்தனர்.
 
கல்முனை ஆதாரவைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் விடுத்த குறுகியகால சமுகவலைத்தள அறிவித்தலைக்கேட்டு பெருந்திரளான இளைஞர்கள் இரத்ததானம் வழங்கமுன்வந்திருந்தனர்.
 
இரத்தவங்கிப்பொறுப்பான  வைத்தியஅதிகாரி டாக்டர் நடராஜா ரமேஸ் தலைமையிலான குழுவினர் அவர்களைப்பரிசோதித்து இரத்தம்பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
 
இரத்தம்தேவையென்று கூறப்பட்டதும் 213இளைஞர்கள் தமது பதிவைச்செய்தனர். அவர்களுள் சுமார் 100பேரின் இரத்தம் பெறப்பட்டது.
 
குறுகிய நேரத்தில் போதுமான இரத்தம் பெறப்பட்டதாகவும் 
கல்முனை காரைதீவு பாண்டிருப்பு உள்ளிட்ட பல தமிழ்ப்பிரதேச இளைஞர்கள் இரத்ததானம் வழங்கியதாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அத்தியட்சகர் முரளீஸ்வரன் தெரிவித்தார்.