மட்டக்களப்பில் வாகனங்களை கண்ட கண்ட இடங்களில் நிறுத்துவதால் பாதுகாப்புக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக பொலிசார் தெரிவிப்பு.

(சிஹாராலத்தீப்)

தற்போதைய அவசரகாலமற்றும் அனர்த்த  சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நன்மைகருதி எடுக்கவேண்டிய அவசர முன் ஆயத்த நடவடிக்கைகள்,மற்றும் மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட குண்டு
வெடிப்பினையடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயும் உயர்மட்ட விசேட கூட்டமொன்று இன்று(26) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

மாவட்ட அரசாங்க அதிபர். மாணிக்கம் உதயகுமார், தலைமையில் இடம் பெற்ற இந்த விசேடகூட்டத்தில்முப்படை , பொலிஸ், அபிவிருத்தி ,உள நலம் சார்ந்த அதிகாரிகள் ,சுகாதாரம், கல்வி, சமூகசேவை, பாதுகாப்பு, சிறுவர்மகளிர்,மின்சாரம்,அனர்த்த நிவாரணம் போன்ற துறைசார்ந்த அரச திணைக்கள அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த உயர்மட்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும்  ஆராயப்பட்டதுடன் , இனிமேல் ஏற்படும் அவசர அனர்த்தங்களுக்கான முன் ஆயத்தங்களை முன்னைய அனுபவத்தின் அடிப்படையில் திட்டமிடுதலும் இடம்பெற்றன. .
இங்கு கருத்து வெளியிட்ட அரசாங்க அதிபர் குண்டுவெடிப்பு சம்பவத்தில்மக்களின் நன்மைகருதி உழைத்த முப்படையினர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு மாநகரசபை , அனர்த்த நிவாரணம் அரசமற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அரச தினைக்களங்களில் கடமைபுரிவோர் அனர்த்த வேளைகளில் மக்களுக்கு உதவக்கூடிய  நிலையில் ஆயத்தமாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார் .
இதேபோல கூடுதலாக பரவிவரும் பொய் வதந்திகளால் மக்கள் மிகுந்த கஷ்டத்தினை அனுபவித்து வருகின்றனர். இதனைபோக்க முடிந்தளவு மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட வேண்டுமென்று பிரதேச செயலாளர்களைக்கேட்டுக்கொண்டார்,
இதேபோல இங்கு முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் அரசின் கவனத்துக்கு சமர்ப்பித்து தீர்வு பெற்றுத்தருவதாகவும் அரசாங்க அதிபர் உதயகுமார் இங்குதெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிதரப்பில் கருத்து வெளியிடுகையில்  மட்டக்களப்பு நகரில் பொய்வதந்தி குண்டுபுரளிகளால் மக்கள் கஸ்டப்படுவதாகவும், வாகனங்களை கண்ட கண்ட இடங்களில் நிறுத்துவதால் பாதுகாப்புக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்இதனை தடுக்க அரச அதிகாரிகள்  உதவவேண்டு மென  கேட்டுக்க்ள்ளப்பட்டது.
பாடசாலைகள் ஆரம்பிப்பதுக்கு முன்னர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படு என்றும் காவலாளிகள் இல்லாத பாடசாலைகளுக்கு பெற்றோரின் ஒத்துளைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் இங்கு கருத்து வெளியிட்டனர்.