நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்த ஜனாதிபதி பணிப்பு

நாடளாவிய ரீதியில் இனந்தெரியாதோர் வசிக்க முடியாதவாறு வீடுகளில் நிரந்தர வதிவாளர் விபரங்களை திரட்டுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதிலும் பாரிய சோதனை நடவடிக்கையினையும் விசேட சுற்றிவளைப்புக்களையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் இனந்தெரியாதோர் வீடுகளிலோ அல்லது வேறு எந்த இடங்களிலோ வசிக்க முடியாதவாறு வீடுகளின் நிரந்தர வதிவிட உரிமையாளர்களிடம் அனைத்து விபரங்களையும் திரட்டுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.