முகத்தை மூட வேண்டாம்

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில், முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்க வேண்டாம் என்று, நாட்டின்  முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை, பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தும் பொழுது, அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் பெண்கள், முகத்தை மூடி அணியும் புர்கா ஆடை தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலினுடைய நிலைப்பாடு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர் என்.எம். அமீன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இந்த விடயத்தில் எடுக்கும் தீர்மானத்தை அங்கிகரிப்பதாகவும் முகத்தை மூடி, ஆடை அணிகின்றமை தொடர்பில், வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசயைப் பின்பற்றுவதே, பொருத்தமாகும் என்றும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.