பாடசாலைகளின் பாதுகாப்​பை உறுதிப்படுத்த சுற்றறிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடளாவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் அடிப்படையில், கல்வியமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், பாடசாலை சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதுகாப்புக் குழுக்களை அமைத்தல், பாதுகாப்புக்காக கடைபிடிக்கவேண்டிய வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள், சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, அதிபர்கள் உள்ளடங்கிய சபை, பெற்றோர், பழைய மாணவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன், பாதுகாப்புக் குழுக்கள், துணைக்குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட 18 விடயங்கள் இந்த சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.