மட்டக்களப்பில் தற்கொலையாளியின் இலக்கு புனித மரியாள் தேவாலயம் ?

மட்டக்களப்பு – சியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தற்கொலைக் குண்டுதாரி, முதலில் புனித மரியாள் தேவாலயத்தையே இலக்கு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கடந்த ஞாயிறு (21) அன்று, மட்டக்களப்பு – புனித மரியாள் கத்தோலிக்கத் தேவாலயத்தின் ஆராதனைகள் விரைவாகவே முடிவடைந்ததால், தற்கொலைக் குண்டுதாரி தனது இலக்கை மாற்றியுள்ளதாக தெரியவருகின்றது.