மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் கைது எனும் செய்தி உண்மையில்லை – பொலிஸ்

மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் கைது என சில ஊடகங்கள் மற்றும் முகநூலில் வெளிவந்த செய்தி உண்மையில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லையைச் சேர்ந்த அதே பெயரினையுடைய ஒருவதே கோட்டமுனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் ஆவர்.

போலியாக செய்தி பரப்பியவர்கள் மீது காத்தான்குடி, மட்டக்களப்கு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் போலியான செய்திகளைபரப்புவர்கள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.