வழமைக்குத் திரும்பிய பொதுப் போக்குவரத்து

இன்று (24ஆம் திகதி) அதிகாலை முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம், இன்று அதிகாலை 4 மணி முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு பெஸ்ட்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பிரதான பஸ் நிலையத்தில் இருந்து வழமை போன்று பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பயணிகள் வருகை குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால், தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.