சிவில் பாதுகாப்புக் குழுக்களை செயற்படுத்துமாறு விசேட சுற்றுநிருபம்

நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களை செயற்படுத்துமாறு அறிவித்து, ஜனாதிபதி செயலாளர் விசேட சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

இதற்கிணங்க, தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களை உடனடியாக செயற்படுத்துமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களை செயற்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை துரிதமாக பெற்றுக்கொள்ள இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.