புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்யுமாறு கோரி தனிநபர் பிரேரணை

புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்யுமாறு கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த தனிநபர் பிரேரணை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க ஊடகங்களுக்கு இன்று தெளிவுபடுத்தினார்.

புர்காவை தடை செய்ய வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டுவர வேண்டும் என ஆளுங்கட்சியின் கூட்டத்தின் போது இன்று நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். தனிநபர் பிரேரணையாக பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் இதனை நான் இன்று சமர்ப்பிக்கவுள்ளேன். முஸ்லிம் தலைவர்களிடம் வினவிய போது, புர்கா என்பது சம்பிரதாயப்பூர்வமான இஸ்லாமிய ஆடை அல்ல என கூறினர். அதனால் புர்காவை தடை செய்வது அவசியமாகும். இது அண்மையில் வந்தவொன்றாகும். சில பயங்கரவாத குழுக்களின் அனுசரணையுடனா இது பயன்பாட்டிற்கு வந்தது என்ற கேள்வி எழுகின்றது. இதனை தனிநபர் பிரேரணையாகவே சமர்ப்பிக்கவுள்ளேன். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் நாம் கலந்துரையாட வேண்டும் என எண்ணுகின்றேன்.