குண்டுகள் பொருத்தப்பட்ட வானும் லொறியும் கொழும்புக்குள் பிரவேசம்

வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட, அலுமினியம் தகரங்களால் மூடப்பட்ட நிலையிலான லொறியொன்றும் சிறியரக வான் ஒன்றும், கொழும்பு நகருக்குள் புகுந்துள்ளதாக, பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவிக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை அடுத்து, கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதுடன், கொழும்புத் துறைமுகப் பொலிஸாரால், துறைமுக வாயிற் பகுதிகளில் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.