கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் நடமாடிய இருவர்

கொக்கட்டிச்சோலை காவல்துறைக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் வைத்து இன்று(23) காலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான முறையில் கொக்கட்டிச்சோலை பிரதானவீதியில் இனந்தெரியாத நபர்கள் இருவர் கால்நடையாக நடமாடிய நிலையில், உரியவர்களிடம் இப்பிரதேத்து மக்கள் விசாரித்த போது முன்னுக்குபின் முரணாண முகவரி மற்றும் பெயர்களை வழங்கியமையினால், காவல்துறையினருக்கு தகவல் வழங்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

சந்தேகத்தினடிப்படையில் இருவர் கைதான சம்பவம் கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் நடையில் வந்த இருவரே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான முகவரியும், பெயரும் கூறியமையினால் இருவரையும் அழைத்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.