மட்டு.படுவான்கரையிலும் துக்கதினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள திணைக்களங்களில் இன்று காலை தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து, அவர்களது குடும்பங்களுக்கு சோகத்தை வெளிப்படுத்துவது இந்த தேசிய துக்கத் தினத்தின் நோக்கம் என அரசாங்கம் விடுத்திருந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, உயிரிழந்தோரை இதன்போது, நினைவுகூர்ந்தனர்.

படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள பிரதேசசபை, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், பிரதேசசெயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை வர்த்தக நிலையங்கள், வீடுகளின் முன்பும், சந்திகளிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமையுடன், பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.