தூர இடங்களிலிருந்து கொழும்புக்கான பஸ், ரயில் சேவைகள் முடக்கப்பட்டன

நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறுமென்றும், எனினும் தூர இடங்களிலிருந்து கொழும்புக்கான பஸ் மற்றும் ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகியவற்றுக்கான தபால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.