பாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்து முதலாம் தவணை விடுமுறையையடுத்து நாளை இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று கொழும்பு உட்பட நாட்டின் 6 பகுதிகளில் பாரி குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.