இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவராக சேயோன் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின்  வாலிபர் முன்னணியின் மாநாடும் நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில்  (சனிக்கிழமை) நடைபெற்றது
இதன்போது, வாலிபர் முன்னணியின்  தலைவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை சேயோன் தெரிவுசெய்யப்பட்டதோடு செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சுரேன் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் பொருளாளராக வவுனியாவைச் சேர்ந்த சிவலோகநாதன் சிவதர்சன் தெரிவானார்.
இம்மாநாட்டில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரத்தினசிங்கம், ஈ.சரவணபவன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜாசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழரசு கட்சியின் கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.