வவுணதீவில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மண்முனை மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் மற்றும் பாடத்தெரிவு தொடர்பான செயலமர்வு வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்றும்(18) நேற்றுமுந்தினமும்(17) நடைபெற்றது.

2018ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக இச்செயலமர்வு நடாத்தப்பட்டது. உயர்தரத்தில் மாணவர்கள் எவ்வாறான பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும், தற்போதைய சூழலுக்கு தொழிலொன்றினை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு எவ் பயிற்சிநெறிகளை பூர்த்தி செய்யவேண்டும். எங்கு அவ் பயிற்சிநெறிகளை பூர்த்தி செய்யலாம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாணவர்கள் தெளிவூட்டப்பட்டமையுடன், மாணவர்கள் ஆர்வம் செலுத்தும் துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில்வழிகாட்டல் பிரிவு மற்றும் வவுணதீவு அபிவிருத்தி அமைப்பு போன்ற இணைந்து இச்செயலமர்வினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில், வலய உயர் உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.