சிறுவர்களினால் அனர்த்த அபாயக்குறைப்பு தெருநாடகம்

0
512

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் சிறுவரை மையப்படுத்திய அனர்த்த அபாயக்குறைப்பு தெரு நாடகம் இன்று(18) வியாழக்கிழமை முனைக்காடு கிராமத்தில் ஆற்றுகை செய்யப்பட்டது.

போதை மற்றும் பிள்ளைகளை விட்டு தாய் வெளிநாடுகளுக்கு செல்வதினால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அனர்த்தங்களை வெளிப்படுத்தியதாக தெருநாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது.


மேலும், அனர்த்தங்களை குறைப்பதற்காக சமுகம் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் தொடர்பிலும், சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து உடனடியாக அறியத்தருவது தொடர்பிலும், சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவூட்டப்பட்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.