மழையுடன் ஜஸ்கட்டிகள்

0
389

நீண்ட வறட்சியான கால நிலைக்குப்பின்னர் வட பகுதியில் நேற்று மழையுடன் ஜஸ்கட்டிகளும் வீழந்துள்ளன.

யாழ்ப்பாணம் நீர் வேலி உள்ளிட்ட பகுதிகளிலேயே ஜஸ் மழை பெய்துள்ளது. நீர் வேலி உள்ளிட்ட பகுதிக்கு 50 நாட்களுக்குப்பின்னர் மழை பெய்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் உட்பட மூவர், மழை காரணமாக தென்னைமரத்தடியில் உள்ள கொட்டிலில் தஞ்சம் புகுந்த வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.