பண்டிகைக் கால வீதி விபத்து – 30 பேர் உயிரிழப்பு

பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கடந்த 11ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளில்
1270 பேர் கைதுசெய்யப்பட்டு;ள்ளனர்.34 980 வாகனங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.