உரிமைசார்ந்த போராட்டத்திற்கு சாமாந்தரமாக அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் – ச.வியாழேந்திரன்

உரிமைசார்ந்த போராட்டத்திற்கு இணையாக அபிவிருத்திசார்ந்த வேலைத்திட்டங்களை சமாந்தரமாக கொண்டுசெல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு சென்றால்தான் பாதிக்கப்பட்ட, அழிந்துபோயிருக்கின்ற இக்கிராமங்களை மீளவும் கட்டியெழுப்ப முடியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.

நாட்டிற்காக ஒன்றிணைவோம் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ், உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, தாந்தமாலை கிராமத்தில் உள்ள மக்களுக்கு நிலக்கடலை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(08) திங்கட்;கிழமை நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திணைக்களம்சார் உயர் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு, உரையாற்றுகையில்,
தாந்தாமலை கிராமம் தாந்தாமலை முருகனை கொண்ட பிரசித்திபெற்ற கிராமம். ஆனால் இங்கு பல்வேறுபட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலையிருக்கின்றது. வீதிகள் தொடக்கம் அனைத்து விடயங்களிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். இங்குள்ள தேவை மலைபோல் இருக்கின்றது. இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமாகவிருந்தால் நாங்கள் முன்னெடுக்கின்ற உரிமைசார்;ந்த வேலைத்திட்டம் உரிமைசார்ந்த போராட்டத்திற்கு இணையாக அபிவிருத்திசார்ந்த வேலைத்திட்டங்களை சமாந்தரமாக கொண்டுசெல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு சென்றால்தான் பாதிக்கப்பட்ட, அழிந்துபோயிருக்கின்ற இக்கிராமங்களை மீளவும் கட்டியெழுப்ப முடியும். இல்லாவிட்டால் இன்னும் 10வருடங்கள் அல்ல இன்னும் 100வருடங்கள் சென்றாலும் எமது கிராமங்கள் இவ்வாறேதான் காட்சியளிக்கும். ஆகவே உரிமைசார்ந்த போராட்டத்திற்கு இணையாக அபிவிருத்திசார்ந்த வேலைத்திட்டங்களையும் சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்ததான் இவ்வாறான செயற்றிட்டங்களை ஜனாதிபதியுடன் பேசி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
கிராமசக்தியில் இக்கிராமம் உள்வாங்கப்பட்டுள்ளது. அடுத்துவருகின்ற வாரம் இக்கிராமத்திலே ஒருவாரம் தங்கியிருந்து இக்கிராமத்தின் பல்வேறு தேவைகளை அறிந்து அவற்றினை தீர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 161கிராமங்களில் கிராமசக்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோன்று, எங்களுக்கு தேவையானதை நாமே உருவாக்குவோம் எனும் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்போம் நிகழ்ச்சித்திட்டம் நாடளாரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. போதைப்பொருள் பாவனையில் இலங்கை மோசமான நிலைக்கு செல்கின்றது. பாடசாலை மாணவர்களுக்கு கூட போதைப்பொருளை விநியோகிக்கின்ற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்குத்தண்டணை கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தீர்மானித்து அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார். இந்த நாடுபோதையற்ற சிறந்த நாடாக மிளிரவேண்டும். எதிர்கால சந்ததி ஆரோக்கியமான சந்ததியாக கட்டியெழுப்பட வேண்டுமென்ற நோக்கில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் நடைபெறுகின்றது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குகின்ற செயற்பாட்டில் தொழில்வழிகாட்டல் செயலமர்வுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றார்.