பதவி உயர்வு கோரியும், மேலும் 10 கோரிக்கைகளை முன்வைத்து மலையகத்தில் உள்ள வைத்தியசாலையின் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பு

0
395
(க.கிஷாந்தன்)

பதவி உயர்வு கோரியும், இன்னும் சில கோரிக்கைகளை முனவைத்து மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்ற தாதியர்களும், தோட்டபுறங்களில் இயங்குகின்ற வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதியர்களும் 08.04.2019 அன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மலையகத்தில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், வெளிநோயர்களுக்கான சிகிச்சை நடவடிக்கை வழமைபோல் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, பொகவந்தலாவ வைத்தியசாலையில் உள்ள வெளிநோயாளர் பிரிவு முடப்பட்டு காணப்பட்டதோடு, குறித்த தாதியர்கள் எவரும் பணிக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நுவரெலியா, லிந்துலை, மஸ்கெலியா ஆகிய ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தந்த நோயாளர்கள் சிலர் திரும்பி சென்றமையும் குறிப்பிடதக்கது.