மட்டுநகர் கண்ட தங்க மகன் A GOLDEN MAN FROM BATTICALOA

மட்டுநகர் கண்ட தங்க மகன்

இந்த மண்ணில் பிறந்து, அதை நேசித்து, நன்மையையே நோக்காகக் கொண்டு வாழ்ந்து வரும் பெரிய உள்ளங் கொண்ட ஆர்ப்பாட்டமில்லாத அருமை மனிதர் போல் சற்குணநாயகம் அடிகள். இயேசு சபைத் துறவியாகி 50 ஆண்டுகள் பணி செய்து இந்த மண்ணிலேயே தவ வாழ்வு வாழும் ஒருவர்.

தன்னை வளர்த்து ஆளாக்கி கல்வியறிவூட்டிய இயேசு சபைத் துறவிகளையும், வாழ்வில் உயர்வு தந்த புனித மிக்கேல் கல்லூரியையும், அமெரிக்க நாட்டில் பெற்ற உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்தல் அறிவையும் எந்தக் காலத்திலும் மறக்கவோ, கைவிடவோ விரும்பாத அன்புள்ளம். இந்த மண்ணுக்கு, அதாவது இலங்கை மண்ணின் தமிழ் பேசும் சமுதாயத்திற்கு குறிப்பாக சாதாரண கத்தோலிக்க மக்களுக்கும் மற்றும் ஏனைய மொழித் துறவிகளுக்கும் வாழ்வில் உளவியல் அறிவூட்டி அவர்தம் வாழ்வை வளப்படுத்தப் பண்ணிய பெருமகன்.

1979 முதல் இலங்கை நாட்டின் திசைகள் பலவும் கால் பதித்து தமிழ்ப் பேசும் இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணாக்கர்களுக்கும் தலைமைத்துவ மற்றும் உருவாக்கல் பயிற்சிகளை வழங்கி தம் வாழ்வில் குறிக்கோள் கொண்டு வாழ அவர்களைப் பயிற்றுவித்த வித்தகர். நாளும் புதியவை கற்கப் பின்னிற்காத அறிவாளி. ஆன்மீகத்துறையில் தூய வின்சன்ட் டி போல் சபை மற்றும் கிறீஸ்தவ வாழ்வுச் சமூகத்தினருக்கு வழிகாட்டிய முன்னோடி இவர்.

அனாதரவான, ஆபத்துக்குள்ளாகக் கூடிய இளைய பரம்பரையினரை புகலிடமளித்து எந்த சிக்கலுக்கும், பிரச்சினைக்கும் ஆளாகாமல், அவர்களையும் உட்பட விடாமல் பாதுகாத்து வழி நடத்தியவர், நடத்தியும் வருபவர். யுத்தம் போன்ற பலவகைப்பட்ட பிரச்சினைக்குள்ளாகி மனச் சிக்கலுக்குள்ளான பிள்ளைகளுக்கென அவர் உருவாக்கிய வண்ணத்துப் பூச்சி பூங்கா உலகப் பிரசித்தம். பணியில் ஒரு ஆமை. ஆயிரந்தான் பண்ணினாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் தொடரும் செயல்கள். தனிப்பட்ட ஒவ்வொருவர் கருத்துக்கும் மதிப்பளிக்கின்றபோது அதில் தன் கருத்தை சேர்க்காத பண்பின் சொந்தக்காரர்.

வறுமையை, அரவணைப்பின் மகிமையை அனுபவித்த ஒருவர். இதனால் துன்புறுவோர்க்கென்று இவர் மனதில் ஓர் நிரந்தர இடம் என்றும் உண்டு.

வயதாகி உடல் நலிந்து நின்றாலும் இறைமகன் இயேசுவைச் சேவிக்கின்ற தன் கடனைச் செவ்வனே அன்று போல் இன்றும் தொடரும் இந்த மனிதரை இறைவன் தன் கண்ணின் கருமணி போல் பாதுகாத்து இன்னும் பல்லாண்டு காலம் அன்புப் பணி செய்ய எல்லாம் வல்ல இறையோன் அருள் பாலிக்க வேண்டும்.

A GOLDEN MAN FROM BATTICALOA

Born in this soil, loves it very much and decorates it with all possible good works. He bears a heart bigger than his own image. That is what Fr. Paul Satkunanayagam – the Jesuit priest! He spent 50 years of his valuable life serving his mother soil and his Lord!

He never forgets for a moment his Alma mater and the Jesuits who created him by educating and giving every opportunity to develop him and the psychology that he learned in America. He was the foremost person who educated ordinary Catholics and Tamil speaking and other clergies to learn psychology in a simple form and encouraged them to enhance their life through such knowledge.

Since 1979, he visited most parts of the country and formed the school children and the youth making them learn leadership qualities that developed them to have an aim in their lives. As a spiritual director, he helped the members of the Batticaloa Vincentian and the members of Christian Life Community guiding them to find Jesus in their service to the public.
During troublesome days he brought vulnerable young girls and boys under his care, provided them with shelter, education and training, protecting them all without any single incident. He maintained transparency in all his activities. He never declined to learn new matters and always eager to learn more and more.
His establishment the ‘Butterfly Garden for traumatized children’ and the education it provided to them through art is world known for its wonderful service. He can be considered as a tortoise famous for its life that continuous silently even after laying thousands of eggs, never bragging of what he has done all these times for the people.

He never forced his ideas and opinions on others. Never provides solutions for others to solve their problems. Rather, he helped all who approached him with troubled minds to find out their own solution themselves providing them with guidelines needed.

He experienced poverty in his early life and he knows well of the greatness of embrace from others in troubled times. That’s why there is always a soft corner in his heart for the poor.
Though his health is fragile due to his age, never seize to worship the Lord through his service to the less privileged people living around him. It is the hope and prayer of all who come to know him that the Almighty shall protect him for many more years considering Fr. Paul as his own eye.

நன்றி

Amanda Rajendram