மூச்சுப்பிடிச்சு பேசுறதுமட்டும்தான் மிஞ்சி போஞ்சு! நாளைக்கு குந்தியிருக்க இடமும் இருக்காது?

நம்மட இலங்கை நாட்ட தமிழன்தான் ஆண்டானாம் என்று சொல்லி சொல்லி மார்தட்டுன மட்டும்தான் மிஞ்சப்போகுது போல, வடக்கு மாகாணத்தில தமிழன் கொஞ்சக்காலம் வாழுவான் ஆனா இப்போ போகிற போக்கப்பார்த்தா கிழக்கு மாகாணத்தில தமிழனே இருக்கமாட்டன். அந்தளவு தமிழனை விட ஏனைய இனங்களின் பிறப்பு வீதம் அதிகரிக்கிறதாக புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.

தமிழனுக்கு தமிழன் மேலதான் போட்டியும், பொறாமையும், வீராப்பும் மட்டுமே தவிர, எல்லோரும் சேர்ந்து நம்மட இனத்தைப் பாதுகாப்போம் என்பதில் எந்த அக்கறையும் இல்லை. அதைவிடுத்து, அந்த அரசியல்வாதி எப்படி, இந்த அரசியல்வாதி எப்படி எண்டு கேட்டா? ஒருவன ஒருவன் பிடிச்சு சாப்பிடுற அளவிற்கு பேசுவானுகள். எப்போதும் நிகழ்வில பேசச்சொன்னா ஒருவன ஒருவன் குறை கூறுகிறானுகளே தவிர, தங்கட மக்கள்ற அபிவிருத்தி பற்றி ஒன்றுமே பேசுறானுகள் இல்லை.

ஒருபக்கம் நிலம் பறிபோகுது, இன்னோர் பக்கம் வளம்போகுது இதுவொன்றுமே தெரியுதுமில்லை. அதற்கு மாறாக அவன், அவன்ட ஆள் இவன், இவன்ட ஆள் என்று ஒருவனை ஒருவன் புறந்தள்ளுவதும், புறஞ்சொல்லுவதும்தான் நடக்கிறது. இதையெல்லாம் வெளியில கதைக்கப்போன வெட்கம்தான். என்ன செய்யிற மற்றவனுகளும் பார்த்து நம்மள சிரிக்கிறானுகள்.

நான்பெரிது, நீபெரிது என்று நினைக்காமா! எல்லோரும் பெரியவர்கள் தான் என்றாச்சும் நினைச்சு நம்மட சனத்திட அபிவிருத்தி தொடர்பில் அக்கறையோடு செயற்படுங்கோ! மூச்சுப்பிடிச்சு ஏசுறவேலைகளை விட்டுவிடுங்கோ! அப்படிசெய்யல்லண்டா உங்களநம்பி உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க செய்யுற தூரோகம் தான்….

துரோகத்தை செய்யமா? மக்களைப்பற்றியும் வளத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளுங்கப்பா…..