மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல”

0
487

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல. ஆகவே சர்வதேச நீதிமன்றத்தை அமையுங்கள் என வலியுருத்துவை கண்டு அரசாங்கம் அஞ்சிவிட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

அதேபோல் தமிழர் தரப்பின் அச்சுறுத்தலை கண்டும் அஞ்சிவிட வேண்டாம். சர்வதேச நீதிமன்றத்தை அமைக்கக்கோரும்  தமிழர் தரப்பின் கோரிக்கை இறுதிவரை கனவாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.