கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 610 பேர் பட்டம் பெறவுள்ளனர்

0
498

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விசேட பொது பட்டமளிப்பு விழா, வந்தாறுமூலை வளாக நல்லையா கேட்போர் கூடத்தில், நாளை மறுதினம் (06) காலை 08  மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்தப் பட்டமளிப்பு விழாவில், 610 பேர் பட்டம் பெறவுள்ளனர்.

முதலாவது அமர்வில் 198 பேர், இரண்டாவது அமர்வில் 232 பேர், மூன்றாவது அமர்வில் 180 பேர் என, உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் இதன்போது வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதலாம் அமர்வு, காலை 8.30  மணிக்கும் இரண்டாவது அமர்வு, 11.30 மணிக்கும் மூன்றாவது அமர்வு, பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறவுள்ளன.