பிரபாகரனின் பேச்சை கேட்டிருந்தால் வில்பத்து பிரச்சினை ஏற்பட்டிருக்காது -முஜிபுர் ரஹ்மான்

0
513

பிரபாகரனின் பேச்சைக்கேட்டு செயற்பட்டிருந்தால் முஸ்லிம்கள் இன்றும் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள். அப்போது வில்பத்து பிரச்சினை ஏற்பட்டிருக்காது. என்றாலும் நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்க செயற்பட்டதாலே விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வில்பத்து பாதுகாத்து சரணாலய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்து சமூகத்தை பிழையாக வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர். வில்பத்து சரணாலயம் அமைந்திருப்பது அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலாகும். ஆனால் தற்போது மக்கள் குடியமர்த்தப்பட்டிருப்பது மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசத்திலாகும் என்றார்.