சுவாமி விபுலாநந்தர் உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த மகாமேதை!

சுவாமி விபுலாநந்தர் உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த மகாமேதை!
இன்று127வது ஜனனதினவிழாவில் பிரதேசசெயலாளர் ஜெகதீசன் உரை!
 காரைதீவு  நிருபர் சகா
 
தமிழுக்கும் சமயத்திற்கும் அருந்தொண்டாற்றிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் தனது சேவைகளால் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த மாமேதையாவார்.

 
இவ்வாறு உலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 127வது ஜனனதினத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். 
 
அவர் பிறந்த காரைதீவு மண்ணில் இன்று(27) புதன்கிழமை  சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம் ஏற்பாடு செய்திருந்த 127வது ஜனனதினவிழா மணிமண்டப வளாகத்தில் தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெற்றது.
 
கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் கலந்துகொண்டார்.
 
முன்னதாக பிரதேசசெயலாளரால் நந்திக்கொடி ஏற்றப்பட்டுஅங்குள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரது திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. 
 வேதபாராயணம் ஓதப்பட்டு செயலாளர் கு.ஜெயராஜியினால் பஞ்சராத்தி தீபமேற்றப்பட்டது. பணிமன்றமுன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்ச்சியை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
 
அடிகளாரின் வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற பாடல் இசைக்கப்பட்டதும் பிரதான சொற்பொழிவு மாணவி லோ.புவித்ரா நிகழ்த்தினார்.
 
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
மனிதனது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலம் அவனது வாழ்க்கைக்காலம். அந்தக்காலத்துள் அவன் செய்தவைகளை வைத்து உலகம் அவனைப்போற்றும் அல்லது தூற்றும்.
 
ஆனால் இன்றுவரை ஒருவரை பாராட்டுகிறோம் நினைவுகூருகின்றோம் என்றால் அவர் செய்தசேவைகள் காலத்தால் அழிக்கப்படமுடியாதது. அவர்தான் சுவாமி விபுலாநந்தர். அவரது சேவைகளை தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நினைத்துப்பாக்கும்.
 
அவர் பிறந்த காரைதீவு மண்ணும் பெருமை வாய்ந்தது. அங்கு இப்படியான விழாக்களுக்கு பஞ்சமில்லை. சைவமும் தமிழும் ஆன்மீகமும் தழைத்தோங்கி மிளிர்வதற்கு சுவாமியும் ஒரு காரணம். என்றார்.
 
மறைந்த அடிகளாரின மருமகளார் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை(கண்ணம்மாக்கா) அவர்களுக்கு நினைவஞ்சலியும் இடம்பெற்றது.