சர்வதேச மேற்பார்வை நீக்கப்படுமாயின் அரசாங்கம் தப்பித்துவிடும்: கூட்டமைப்பு

0
378

சர்வதேச மேற்பார்வை நீக்கப்படுமானால் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துவிடும், என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை கூட்டத்தொடர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மனித உரிமை ஆணையகம் தொடர்ச்சியாக இலங்கை மீது கரிசனை காட்ட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஆதரவளிக்காத நிலைமையையே காண்கின்றோம்” என்றும் குறிப்பிட்டார்.