முறையற்ற முறையில் கோழி இறைச்சி கொண்டு சென்றவருக்கு நேர்ந்தகதி

மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து பதியத்தலாவை பிரதேசத்திற்கு  சிறிய ரக வாகனத்தில் சுகாதார முறையற்ற முறையில் 162 கிலோ கோழி இறைச்சியை எடுத்துச் சென்ற ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்துமாறும் இறைச்சியை பறிமுதல் செய்து உடன் அழிக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் இன்று உத்தரவிட்டார்.

 

இன்று (12) செவ்வாய்க்கிழமை புல்லுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் பொன்னம்பலம் மனேகரன் ,கரடியனாறு  பொதுச் சுகாதார பரிசோதகர் த.ரவிவர்மா ஆகியோர் கொடுவாமடு பிரதேசத்தில் வீதியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி பரிசோதனையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது பதியத்தலாவை நோக்கிச் சென்ற படி  ரக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் புளி மூட்டைகளுடன் சுகாதார முறையற்ற முறையில் 162 கிலோ கோழி இறைச்சிகளை கொண்டு செல்வதை கண்டுபிடித்ததையடுத்த்து ஒருவரை கைது செய்ததுடன் கோழி இறைச்சிகளை மீட்டனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து அழிக்குமாறு உத்தரவிட்டார்.என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.