சகல ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க போராட்டம்

நாடுதழுவிய ரீதியில் ஆசிரியர்கள் நாளை 2019.03.13 சுகவீனத்தில் இருக்க உள்ளார்கள். இதனை முன்னிட்டு ஆசிரியர்கள் பாடசாலைகளில் சுகவீன விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, ஆசிரியர்களின் நிர்வாக ரீதியான வேலைப்பழு, வரவு செலவு திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட 6 வீத ஒதுக்கீடு போதுமானதல்ல போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடத்தப்படுகிறது. சகல ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் இணைந்து இதனை முன்னெடுக்கின்றனர்.

இதேவேளை அண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற ஹர்த்தால்கள் கடைஅடைப்கள் காரணமாக மாணவர்களின் கல்வியில் பாதிப்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் வழமை போன்று பாடசாலைக்குச் சென்று அதன் வாயிலில் கறுப்புபட்டி அணிந்து காலை 8.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை கவனயீர்;ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தி;ன பொதுச் செயலாளர் யோசெப் ஸ்டாலின் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று காலை ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து கொழும்பு கோட்டை கையிரத நிலையத்திற்கு முன்னால் காலை 10.00 மணிக்கு எதிர்;ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யோசெப் ஸ்டாலின்) 077 311 2541