அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்த போராட்டம்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பினை  கோரி எதிர்வரும் 13 ஆம் திகதி அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையில் செல்லவுள்ளனர்.

 

அத்துடன் அன்றைய தினம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாரிய வேலைநிறுத்த போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதுடன் இந்த போராட்டத்தில் அனைத்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு பிரதான புகையிரத நிலையத்தின் அருகில் இந்த வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதில் அசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவையாளர் சங்கம், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட 18 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.