காரைதீவுபிரதேச சபையில் கொந்தளிப்பு

இன்றுகாரைதீவுபிரதேசசபையில் சம்பவம்: ஊழியர்கள் கொந்தளிப்பு!
(காரைதீவு 

நிருபர் சகா)

கடந்த 3வருடங்களாக அடிப்படையில் பணியாற்றும் ஆறு ஊழியர்களின்
சேவையை மேலும் ஆறு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை 5உறுப்பினர்கள்
அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இம்மாத சம்பளமும் நிறுத்தப்படவுள்ளது.

காரைதீவு பிரதேசசபையின் 12வது மாதாந்த அமர்வு இன்று(8) வெள்ளிக்கிழமை

சபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்றபோது
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அங்கு ஒவ்வொரு பிரேரணையாக எடுத்து நிறைவேற்றப்பட்டுக்கொண்டுவந்தவேளை
வழமைபோல 6பதிலீட்டு ஊழியர்களை மேலும் 6மாத காலத்திற்கு நீடிக்கும்
பிரேரணையை தவிசாளர் முன்வைத்தார்.


அதனை உறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் முன்மொழிய உறுப்பினர் த.மோகனதாஸ்

வழிமொழிந்தார். ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா? என்று தவிசாளர் கேட்டார்.

அப்போது சுயேச்சைக்குழு உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் எழுந்து தான்
எதிர்ப்பதாகக்கூறினார்.

ஒரு உறுப்பினர் எதிர்த்தாலும் அப்பிரேரணை வாக்கெடுப்பிற்கு
விடப்படவேண்டும் என்ற பிரதேசசபைச்சட்டத்திட்டத்திற்கமைய வாக்கெடுப்பிற்கு
விட்டார் தவிசாளர்.

அப்போது பிரேரணைக்கு எதிராக ஆ.பூபாலரெத்தினம் ச.நேசராசா இ.மோகன்
உபதவிசாளர் எ.எம்.ஜாகீர்;  எம்.எச்.எம்.இஸ்மாயில் ஆகிய 5உறுப்பினர்கள்
வாக்களித்தனர்.


பிரேரணைக்கு ஆதரவாக தவிசாளர் கி.ஜெயசிறில் எம்.காண்டீபன்

எ.ஆர்.எம்.பஸ்மீர் த.மோனதாஸ் ஆகியோர் வாக்களித்தனர்.மூவர் அப்போது
சபைக்குவரவில்லை.
 
னவே சபையிலிருந்த 9பேரில் 5பேர் எதிர்த்தும் 4பேர் ஆதரவாகவும்
வாக்களித்ததனால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
அதனால் குறித்த பதிலீட்டுஅடிப்படையிலான ஊழியர்கள் அறுவரையும் நிறுத்தி
சம்பளம் மறுக்கும் நிலையேற்பட்டுள்ளது.

உறுப்பினர் மு.காண்டீபன் அங்கு உணர்ச்சியுடன் பேசுகையில்:

இங்கு எதிர்த்துவாக்களித்துள்ளதனால் அந்த ஊழியர்கள் நிச்சயம்

பாதிக்கப்படுவார்கள். மக்களுக்கான சேவை ஸ்தம்பிதமாகும் வீதி விளக்கு
பொருத்தப்படமாட்டாது குப்பைகள் அள்ளுவதில் தடங்கல் ஏற்படும்.
இந்த ஊழியர்கள் சம்பளத்தை நம்பிவாழ்கிறவர்கள். அவர்கள்
வயிற்றிலடிக்கவேண்டாம். அவர்கள் மக்களுக்கான சேவையைச்செய்துவருபவர்கள்.
எனவே தயவுசெய்து எதிர்த்த உறுப்பினர்கள் வாபஸ்பெறுங்கள்.
நீங்கள் அரசியல் செய்கிறீர்களே தவிர
மக்களைப்பற்றிச்சிந்திக்கவில்லை.அரசியலுக்காக மக்களைப் பகடைக்காயாக
மாற்றாதீர்கள். அரசியல்பழிவாங்குவதைவிடுத்து மக்கள்பிரதிநிதியென்றால்
அதற்கேற்ப இதயசுத்தியோடு செயற்படுங்கள். இந்நிலை நீடித்தால் நான்
இராஜினாமாச்செய்வேன் என்றார்.

கடந்த 3வருடகாலமாக தொடர்ச்சியாக பணியாற்றிவரும் திருமதி அ. பிரியதர்சினி
 கோ.ஜெயராஜ் வி.சுரேந்திரன் எஸ்.சிறிதரன் எம்.பரமலிங்கம் எவ்.சபிக்கா
ஆகியோரே இவ்வாறு அந்த 5உறுப்பினர்கள் எதிர்த்த காரணத்தினால் சம்பளமின்றி
நிறுத்தப்பட்டவர்களாவர்.

அவர்கள் இம்முடிவைக்கேட்டதும் பலத்த ஆவேசத்துடன்
கொந்தளிக்கத்தொடங்கியுள்ளனர்.சபை முன்றலில் கோசமிட்டவாறு நின்றனர்.
குறித்த உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் உபதவிசாளர் அவருக்கு ஒத்துழைத்த
5உறுப்பினர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.