அமைச்சர் மனோகணேசனின் கவனத்திற்கு மூதூரில் கவனிப்பாரற்று சீரழிந்து கிடக்கும் இந்து இல்லக்கட்டடம்.

மூதூர் நகரில் திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர்பேரவையால் நிருவகித்து வந்த இல்லக்கட்டிடம் கவனிப்பாரற்று சீரழிந்து கிடப்பதை திருகோணமலை நகரசபைத்தலைவர் ந.இராசநாயகம் சென்று பார்வையிட்டார்.

பேரவையின் தற்போதைய நிருவாகத்தின் முறைகேடு காரணமாக இவ்வாறான பேரவையின் சொத்துக்கள் சீரழிவதாக பலரும் நகரசபைத்தலைவருக்குச்சுட்டிக்காட்டினர்.அதனை ஏற்றுக்கொண்ட அவர்

இதனைப்பார்வையிட்டு வேதனை தெரிவித்தார். நகரசபைத்தலைவர் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசவுள்ளதாக தெரிவித்தார்.

இப்பேரவையின் நிருவாகத்தை முறைகேடாக கைப்பற்றி யுள்ளவர்கள்  கடந்த 2007இல் இருந்து இந்நிலமைக்கு பேரவையை தள்ளியுள்ளனர்.இதற்கு சிலர் உதவியும் உள்ளமை திருகோணமலை பிரதேசசெயலகம் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் தெரியுமஎனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்து நிறுவனங்கள் மீளத்துடிக்கும்  இக்காலத்தில் இவ்வாறு அமைப்பையும் அதன்சொத்தையும் முடக்க திணைக்களம் துணைபோவது வருத்தமளிக்கிறது.இதனால் ;  54 இற்கும் மேற்பட்ட கிராமங்களின் இயங்கிய இந்து மன்றங்கள் முடக்கப்பட்டுள்ளன. மட்டுமன்றி முறைகேடுகளும் உள்ளதாக பலமுறை இந்து சமயகலாசார த்திணைக்களம், மற்றும் மாவட்ட செயலகத்திற்கு முறையிடப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தபோதும் பல்வேறு பின்னணி அழுத்தம் காரணமாக இப்பேரவை மீழத்துயில்கொள்வதாக முறையிடப்பட்டுள்ளது.

இம்முறைகேட்டை நீக்கி சட்ட ரீதியான நிருவாகத்தைஇந்து சமய  கலாசார அலுவலகதிணைக்களம் மேற்கொள்ளவேண்டும் என்ற எழுத்துமூலகோரிக்கைள்;

உள்ளபோதும்  விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் திணைக்களம் இப்பிரச்சனையை முடிவுறுத்தவில்லை

இதன்காரணமாக பேரவையின் காணி உள்ளிட்ட சொத்துக்கள் முறைகேடாக பாவிக்கப்படுவதுடன் மன்றங்களும் செயலிழந்துள்ளன.அறநெறி உள்ளிட்ட கலாசார நடவடிக்களில் சிறந்து விளங்கிய இவ்வமைப்பின் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட இல்லத்தின் கட்டிடமே இவ்வாறு காணப்படுகின்றது.

இவ்விடயத்தில்  இந்து சமயகலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தலையிட்டு திணைக்களத்தின்மேற்பார்வையில் புதியஇடைக்கால நிருவாகத்தை தெரிவு செய்து பேரவை மற்றும் மன்றங்களின் செயல்பாட்டிற்கு வழிவகுக்கவேண்டும்

எனக்கோரிக்கைவிடப்பட்டுள்ளது. குறித்த சொத்துக்கள் இந்து மக்களின்சேவைக்குதவவேண்டும் இந்நடவடிக்கைளில் நகரசபைத்தலைவரும் பங்களிக்கமுன்வரவேண்டும் எனவும் கோரிக்கைமுன்வைக்கப்பட்டுள்ளது.