அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 2500 ரூபா மேலதிகமாக வழங்கப்படயிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தில் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு 2020 ஆண்டு வரையில் 5 கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. இதேபோன்று சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய சம்பள முரண்பாடு தீர்க்கப்படும்.

அரச ஊழியர்களின் சீருடைக்காக வழங்கப்படும் கொடுப்பனவு 600 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இராணுவ கமான்டோ படையினருக்காக மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு 1000 ரூபாவிலிருந்து 5000 ரூபா அதிகரிக்கப்படவுள்ளது. வீட்டு வாடகை கொடுப்பனவு 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது. இராணுவத்துக்கு சமமான ஏனைய ஊழியர்களுக்கும் இது வழங்கப்படும்.
கிராம புறங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒருகப் பால் வழங்கப்படவுள்ளது.

ஓய்வூதியகாரர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதற்காக 12 000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 85 இலட்சம் பேர் பயனடையவுள்ளனர்.

வரவு செலவு திட்டத்துக்கு அமைவாக உள்நாட்டு சாராய உற்பத்திகளின் விலைகள் இன்று நள்ளிரவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 750 மில்லிலீற்றரைக் கொண்ட சாராயம் 63 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. 350 மில்லிலீற்றர் பியர் போத்தல் 9 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. கள்ளு சாராயத்தின் விலையில் எந்தவித மாற்றமில்லை

60 மில்லிமீற்றர் நீளத்தை கொண்ட சிகரட்டுக்கான வரி 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைவாக பொதுவாக சிகரட்டின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.
பீடி விலைக்கான செஸ் வரி ஒரு கிலோவுக்கு 2500 ரூபாவிலிருந்து 3500 ரூபா வரையில் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைவாக பீடி ஒன்றின் விலை 50 சதத்தால் அதிகரிக்கப்படுகிறது.

விகாரைகளில் சூரிய மின்உற்பத்திக்கான வசதிகள் விரிவுப்படுத்தப்படவுள்ளன. விகாரை ஒன்றுக்கு இதன் கீழ் 3 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

வரட்சி வலய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக மகளிர் மட்டும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சுக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அனர்த்தத்துக்குள்ளான வீடுகளை புனரமைப்பதற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு இதற்கமைவாக தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் வீடுகள் அமைக்கப்படும்.
சமுர்த்தி வேலைத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. மேலும் 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக நேரங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணம் 100 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கெசினோ அனுமதி கட்டணம் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு கெசினோவில் பிரவேசிப்பதற்கான கட்டணம் 50 டொலர்களாக அதிகரிக்கப்படுகிறது.
விமான பயணிகள் கப்பல் பயணிகளுக்கான விமான நிலையங்களில் அறவிடப்படும் கட்டணம் 10 அமெரிக்க டொலர்களாக திருத்தப்படவுள்ளது. இந்த கட்டணம் முன்னர் 5 டொலர்களாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுவான கடவு சீட்டுக்கான கட்டணம் 500 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. புதிய கட்டணம் 3500 ரூபாவாகும். ஒரே நாளில் கடவு சீட்டை பெறுவதற்கான கட்டணம் 5000 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைவாக புதிய கட்டணம் 15 ஆயிரம் ரூபாவாகும். கடவு சீட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கட்டணம் 500 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான புதிய கட்டணம் 1000 ரூபாவாகும்.

800 சிலின்டர் வலுவுக்கும் குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 150 000 வினாலும் 1000 சிலின்டர் வலுவுக்கும் குறைந்த பெற்றோர் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 175 000 ரூபாவினாலும் 1300 சிலின்டர் வலுவுக்கும் உட்பட்ட பெற்றோர் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 5 லட்சம் ரூபாவாக அதிகரிப்பு 800 சிலின்டர் வலுவுக்கும் குறைந்த ஐபிரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 250 000 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. சிலின்டர் வலுவுக்கும் உட்பட்ட ஐபிரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 500 000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

கிலோ வோட் 70 மின்சார மோட்டார் வாகனத்தின் மீதான உற்பத்தி வரி 175 000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதேபோன்று 200 சிலின்டர் வலுவைக் கொண்ட முச்சக்கர வாகன மீதான உற்பத்தி வரி 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகிறது.

நாளையிலிருந்து அதி சொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன். வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது.
யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு

வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.