முதலைக்குடா பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு உதவி வழங்கி வைப்பு

0
493

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் கல்விப்பொதுத்தராதர உயர்தர விஞ்ஞான, கணிதப் பிரிவு மாணவர்களுகளின் போக்குவரத்துக்கு அண்மையில் உதவி வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் மு.செல்வராசா இதனை வழங்கி வைத்தார்.

முதலைக்குடா பாடசாலையில் கற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்கள், பிரத்தியேக வகுப்பிற்காக மட்டக்களப்புக்கு செல்ல வேண்டியுள்ளது. அதேவேளை மாணவர்கள் வகுப்பினை நிறைவு செய்து வருகின்றவேளை மாணவர்களுக்கு பொதுபோக்குவரத்து வசதிச்சேவை இல்லாமையினாலும், போக்குவரத்துக்கு பணம் செலுத்துவதற்கு வசதி இல்லாததினாலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாடசாலையினால் விசேட போக்குவரத்து ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒருபகுதி பணத்தினை மு.செல்வராசா வழங்கியிருந்தார். மேலும் பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ள மாணவர் ஒருவருக்கும், அவரது கற்கை நிறைவு பெறும்வரை மாதாந்தம் 5000ரூபாவினை வழங்குவதற்கும் முன்வந்துள்ளார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனசூரியம், தேசபந்து மு.செல்வராசா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், பாடசாலையின் அதிபர் கோபாலபிள்ளை, முன்னாள் அதிபர் சி.அகிலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.