கொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்

க.கிஷாந்தன்)

 

கொழும்பிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாடின்மையால் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

அட்டன் நுவெரலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் குறித்த கார் பின் பகுதியில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இவ்விபத்து 23.02.2019 அன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இவ் விபத்தில் காரில் பயணித்த மூவரில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இவ் விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.