ஈழப் போராட்டத்தில் இறுதிவரை களத்தில் நின்ற போராளிகளுக்கும் மக்களுக்குமே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இவ்வாண்டிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வின் செயற்குழு நிர்வாக தெரிவு நாளைய தினம் 24.02.2019 ஆம் திகதி இறுதியுத்தம் முற்றுப்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் தெரிவு செய்யப்படுகின்ற நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்……..
கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பல சர்ச்சைகளும் சிக்கல்களும் நிலவியது காரணம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல்வாதிகள் என பலர் இச் செயற்குழுவில் செயற்பட்டனர் இவ்விடத்தில் அரசியலுக்கு இடமில்லை பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாடுகள் பக்கச்சார்பாகவும் மறைமுகமான அடக்குமுறையாகவும் அமைந்திருந்தது.
ஆனால் இந்நினைவேந்தல் நிகழ்வில் முழுப்பங்களிப்பு மற்றும் ஏற்பாட்டுக்குழுவில் அங்கம் வகிக்க பூரண அதிகாரங்கள் இறுதிகட்ட யுத்தத்தில் கடைசிவரை களத்தில் நின்ற போராளிகளுக்கும் பொதுமக்களுக்குமே ஆகும் ஆகையினால் அரசியல்வாதிகள் பிரமுகர்கள் சிவில் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொண்டு  நினைவுகூற முடியும் ஆனால் செயற்குழுவில் அங்கம் வகிக்க அறுகதியற்றவர்கள் ஆனால் செயற்குழுவில் இணைந்து செயற்படமுடியும் தனித்து செயற்பட முடியாது.
அந்தவகையில் நிர்வாக தெரிவானது நாளை 24/02/2019 ஞாயிற்றுக் கிழமை முள்ளிவாய்க்கால் புனித மண்ணில் நிர்வாகத் தெரிவு இடம்பெற உள்ளதனால் முள்ளிவாய்க்கால் , முல்லைத்தீவு பிரதேச பொதுமக்கள் , வடகிழக்கு வாழ் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியில் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.