மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லைப் பிரச்சனை – மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தினதும், அம்பாறை மாவட்டத்தினதும் எல்லைப் பிரச்சனை மிக நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இது தற்போது வலுப்பெற்றுள்ளது, இதனை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து சுமுகமாக தீர்த்த்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபையின் கழிவகற்கும் வாகனங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திக்கூடாக தினமும் வந்து செல்வதானால், அப்பகுதி மக்கள் பல சுகாதார பிரச்சனைகளை எதிர் கொண்டு வருவதாக தெரிவக்கின்றனர். இதனைவிட மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குள் வரும் கல்லாறு கிராமத்தின் ஒரு பகுதியை அம்பாறை மாவட்டம் நிருவகிப்பதாகவும், மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைத் தவிசானர் ஞா.யோகநாதன் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் கல்லாறு கிராம மக்கள் தமது கிராமத்தை ஊடறுத்து கல்முனை மாநகர சபையின் மாநகரசபை கழிவகற்றும் இயந்திரங்கள் வரக்கூடாது எவும், எமது எவ்லையை சரியான முறையில் அடையாளமிடப்பட வேண்டும் எனவும், தெரிவித்து வியாழக்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மேலலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்; தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் இவ்விடையம் தொமர்பிலாக கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, களுவாஞ்சிகுடி பொலிசார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அடுத்தவாரம் மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், தலைமையில் அனைத்து உயர் அதிகாரிகளையும் உள்ளடக்கியதாக இப்பிரச்சனை தொடர்பில் கூட்டம் ஒளன்றை நடாத்தி தீர்வு காணுதல்,
களுவாஞ்சிகுடி பொலிசார், மட்டக்களப்பு கல்முனை எல்லையில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்தல்.
கல்முனை மாநகரசபையின் கழிவகற்கும் வாகனங்கள் கல்லாறு கிராமத்தை ஊடறுத்துச் செல்வதை தடை செய்தல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் இக்கூடத்தின்போது எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.