ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்தீபா என்ற சந்தேகம் எழுகின்றது. அதனால் இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.