ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள்

0
595

பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, ஓய்வுப் பெற்ற பாடசாலை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாத்தளை- நாவுலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் யோசனையொன்றை சமர்ப்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.