பூரணம் புலமைப்பரிசல் வினாத்தாள்; நூல் வெளியீடு

முன்னைநாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொகுப்பு நூலான பூரணம் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் க பாஸ்கரன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (09) வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரனும், கௌரவ அதிதியகாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கலவிப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் ரி.ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றார்கள் எனப் பலரும்  இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் திறன்களை விருத்தி செய்யும் வகையில் இந்த நூல் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.